சாமி 2 படத்திலிருந்து த்ரிஷா திடீர் விலகல்! | Trisha's sudden deviation from Sami 2

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (23/10/2017)

கடைசி தொடர்பு:17:21 (23/10/2017)

சாமி 2 படத்திலிருந்து த்ரிஷா திடீர் விலகல்!

டாட்டா சுமோவையே வேகமாகப் பறக்கவிட்டு படத்தின் வேகத்தைக் கூட்டும் இயக்குநர் ஹரி 'சிங்கம் 3' படத்துக்குப் பிறகு 'சாமி 2' படத்தை இயக்கப்போவதாகத் தெரிவித்தார். விக்ரமுடன் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகத் தகவல் வந்தது. 

த்ரிஷா


மேலும், படத்தில் வில்லன் கேரக்டரில் பாபி சிம்ஹா நடிப்பதாகவும். படத்துக்கான இசையை ஹாரீஸ் ஜெயராஜ் இசைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவி ஶ்ரீ பிரசாத்தான் படத்துக்கான இசையமைப்பாளர் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. விரைவில் 'சாமி 2' படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 'சாமி 2' படத்தின் கதையிலிருந்து தான் விலகிக்கொள்வதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்தது மட்டுமன்றி 'சாமி 2' குழுவுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகை யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close