மெர்சல் படத்தின் தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெறக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..! | PIL filed against Mersal movie in High court

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (23/10/2017)

கடைசி தொடர்பு:19:50 (23/10/2017)

மெர்சல் படத்தின் தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெறக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

மெர்சல் திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 


மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் தொடர்பான வசனங்கள் மற்றும் காட்சிகளுக்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும் ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகள் உண்மைக்குப் புறம்பாக இருக்கிறது. அதை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தேசிய அளிவில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. மேலும் விஜய் மற்றும் மெர்சல் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு வந்துகொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் தயாரிப்பு நிர்வாகம் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரையில் அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை. இந்தநிலையில், வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் மெர்சல் படத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'சிங்கப்பூரில் வரி குறைவு, இந்தியாவில் வரி அதிகம் என்று படத்தில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ள படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.