கன்னியாகுமரியில் டெங்குக் காய்ச்சல் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையாளர் ஆய்வு..! | Disaster management secretary has visit Nagarcoil

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (23/10/2017)

கடைசி தொடர்பு:20:25 (23/10/2017)

கன்னியாகுமரியில் டெங்குக் காய்ச்சல் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையாளர் ஆய்வு..!

டெங்குக் காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக பேரிடர் மேலாண்மை ஆணையாளர் ராஜேந்திர ரத்னூ நாகர்கோவில் வருகை தந்திருந்தார்.

டெங்குக் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி டெங்குக் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. இதனால் தொடக்கம் முதல் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. கன்னியாகுமரி வட்டத்தில் தற்போது கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. டெங்குக் காய்ச்சலின் தாக்கமும் குறைந்தும் வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 4,500 ஊழியர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நகர்நல அலுவலர் வினோத் ராஜ் தலைமையில் நாகர்கோவில் நகரம் முழுதும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதை அகற்றுவதுடன் சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தீடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்குக் காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காகப் பேரிடர் மேலாண்மை ஆணையாளர் ராஜேந்திர ரத்னூ நாகர்கோவில் வந்தார். இன்று அவர் வல்லன் குமாரன் விளை, ராமன்புதூர், குருசடி பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீடுகள் நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டபோது சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மேலும் டெங்குக் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புஉணர்வுகள் கொண்ட துண்டு பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க