கைத்தறி நெசவாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்! விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி நாள்!

கைத்தறி நெசவாளர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தில் சேர வருகிற 27-ம் தேதி கடைசி நாள் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

இதுபற்றி, கரூர் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சரக உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ’மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா’ என்னும் காப்பீடு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம் அல்லது நிரந்தர ஊனம், பகுதி ஊனம் ஆகியவற்றுக்கு காப்பீடுத் தொகை வழங்கப்பட்டுவருகிறது.

மத்திய அரசு புதியதாக ’பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ மற்றும் ’பிரதான் மந்திரி சுரக்ஷா யோஜனா’ ஆகிய இரண்டு புதிய காப்பீடு திட்டங்களை நடப்பாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. இப்புதிய திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 50 வயது வரையுள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் அல்லது நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ. 2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தால் ரூ. 1 லட்சமும் வழங்கப்பட இருக்கிறது.

50 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீடு தொகை ரூ 60,000 வழங்கப்படுகிறது. எனவே, கரூர் மாவட்டத்தில் தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி உபதொழில் செய்பவர்கள் கரூர் வெங்கமேடு பகுதியில் செயல்பட்டு வரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சரக உதவி இயக்குநர் அலுவலகம் 121/5, திட்டசாலை, வி.வி.ஜி.நகர், வெங்கமேடு, கரூர்-6 என்ற முகவரியில் வருகின்ற 27.10.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!