வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (24/10/2017)

கடைசி தொடர்பு:13:52 (24/10/2017)

சாம்பாரில் பல்லி! - அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் பரபரப்பு

amma unavagam

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவக சாம்பாரில் பல்லி கிடந்ததால், சாப்பிட்ட பெண் வாந்தி எடுத்த சம்பவம், மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

amma unavagam

 ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தினந்தோறும் ஏராளமான மக்கள்  சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். இங்கு, நோயாளிகளின் வசதிக்காக அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. மணவாளக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த ஏஞ்சல் என்பவர், தனது தாயார் அமலாவை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அம்மா உணவகம்

இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்துக்கு காலை உணவு சாப்பிடச் சென்றுள்ளார் ஏஞ்சல். இட்லி வாங்கி சாப்பிட்டபோது, அதில் ஊற்றிய சாம்பாரில் சிறிய பல்லி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

அம்மா உணவகம்
 

தகவல் அறிந்த சக நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் சுகாதாரத் துறையினர், உணவகத்தில் சமையல் செய்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க