வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (24/10/2017)

கடைசி தொடர்பு:18:17 (24/10/2017)

ராஜராஜனுக்கு சாதி சாயம் பூசும் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்..! இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனுக்கு 1032-வது சதய விழா அரசு சார்பில் வரும் 30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழனுக்கு சாதிய சாயம் பூசும் அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதிக்க வேண்டுமென ராஜராஜன் வேடத்தில் வந்து தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்தனர் இந்து மக்கள் கட்சியினர்.

 இந்து மக்கள் கட்சி


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த ராஜராஜ சோழனுக்குப் புலவர் பெருமக்கள் 40-க்கும் மேற்பட்ட புனைப்பெயர்கள் சூட்டியுள்ளனர். அருள்மொழித்தேவன், பெருவுடையார் பெருந்தச்சன், கேரளந்தான் என 35-க்கும் மேற்பட்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட சாதியச் சங்க அமைப்புகள், ராஜராஜன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று சதயவிழா அன்று ராஜராஜன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று தஞ்சையே மிரளும் அளவிற்கு போஸ்டர்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துகிறார்கள்.

மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்போது கலவரங்கள் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. நாங்கள் சாதிய விழா கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. ராஜராஜன் எங்கள் சாதியைச் சார்ந்தவர் என்று உரிமை கொண்டாடுவதை நாங்கள் எதிர்க்கிறோம். சாதிய அமைப்புகளின் பிழைகளை ஊக்குவிப்பது வரலாற்றுப் பிழை. ராஜராஜனை வைத்து வருங்காலத்தில் சாதியக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சாதியத் தலைவர்கள் ராஜராஜன் பெயரைச் சொல்லி அனுமதி கேட்டால் தடை விதிக்க வேண்டும். ராஜராஜனுக்கு பிளக்ஸ் வைப்பதற்கும், போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 நாள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க