Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு!

திருச்சியில் பி.ஜே.பி.யினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.

திருமா உருவ பொம்மை எரிப்பு
மெர்சல் பட விவகாரம் தொடர்பாக எழுந்த கருத்து மோதலை அடுத்து பி.ஜே.பி
மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவனை `கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழி' என விமர்சனம் செய்தார்.

இதில் கோபமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே தமிழிசையின்
உருவ பொம்மை எரிப்பு, அவர் மேல் புகார் கொடுப்பது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் கரூரில் இன்று நடைப்பெற்ற  பி.ஜே.பி மாநிலச் செயற்குழு மற்றும்
பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும்
கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், பிரச்னை செய்தார்கள். இதனால்  அங்கு மோதல் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இதற்கு எதிராகத் தமிழிசை
`தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் எங்கள் கட்சியினரை
தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்' என சவால் விட்டுள்ளார். 

நிலமை இப்படியிருக்க, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே பி.ஜே.பி இளைஞரணி தலைவர் கெளதம் தலைமையில், அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த கோபால், நடராஜன் மற்றும் புருசோத்தமன் ஆகியோர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கோஷமிட்டதுடன், திருமாவளவனின் உருவ பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதைப் பார்த்துப் பதறிய போலீஸார் தீயினைத் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டிக்குப் போராட்டத்தில்
ஈடுபடுவார்கள் எனும் தகவல் பரவ தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close