சிவகங்கை நகராட்சியை அலற வைத்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் மா.செ!

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட் பகுதியில் குப்பைகள் பல மாதங்களாக எடுக்கப்படாததைக் கண்டித்துக் குப்பைகளை அள்ளும்வரை குப்பை உள்ள பகுதியிலேயே தர்ணா செய்வேன் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி  திடீர் போராட்டத்தை அறிவிப்பு செய்தார்.

மா.செ       

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கந்தசாமி கூறும்போது... "சிவகங்கை நகராட்சிப் பகுதியில் சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வீடுதோறும் விழிப்புஉணர்வு கருத்துகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டெங்கு பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அப்படியிருக்கும்போது நகராட்சி முஸ்லிம் பள்ளி அருகே, தினசரி மார்க்கெட் அருகே குப்பைகள் குவிந்து, அதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வரை குப்பை உள்ள இடத்திலேயே இருக்கப் போவதாக நகராட்சி ஆணையர் அய்யனாருக்குச் சொன்னேன். ஆனால், பல தடவை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் குப்பையை அகற்றும்வரை அந்த இடத்தைவிட்டுச் செல்ல முடியாது என நம் தோழர்களோடு அறிவித்தோம். உடனே கமிஷனர் அய்யனார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் நாங்கள் நின்றுகொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். நகராட்சி கமிஷனர் அய்யனார் நேரடிப் பார்வையில் குப்பைகள் அகற்றப்பட்டன'' என்றார். இதையடுத்து, மாவட்டச் செயலாளர் கந்தசாமி, நேரு பஜார் கிளைச் செயலாளர் ராமச்சந்திரன், ராஜா ஆகியோர்கள் தலைமையில் நடந்த குப்பை அகற்றும் போராட்டம்  முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!