வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (24/10/2017)

கடைசி தொடர்பு:21:30 (24/10/2017)

பெங்களூருவில்... சுகேஷ் சந்திரசேகர் யார் யாருடன் பேசினார்?-  டெல்லியிலிருந்து நீளும் விசாரணை

தினகரனை உள்ளே தள்ளியவர் சுகேஷ் சந்திரசேகர். டெல்லியின் பிரபல புரோக்கர். நூதன முறையில் மோசடி செய்வதில் கில்லாடி. தென் இந்தியாவில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம். இந்த நிலையில், டெல்லி தேர்தல் தலைமை ஆணையக உயர் அதிகாரிகள் தன் கைப்பிடிக்குள் இருப்பதாக சொல்லி, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி டி.டி.வி.தினகரன் தரப்பினரிடம்  ரூ.50 கோடி பேரம் பேசியதாக சுகேஷ் மீது புகார் எழுந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்,  டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுகேஷை போலீஸ் சுற்றிவளைத்தனர். அவரிடமிருந்து இரண்டு சொகுசுகார்கள், 1.30 கோடி பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதே வழக்கில், டெலிபோனில் பேசிய சில விவரங்களை மேற்கோள்காட்டி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 
இதற்கிடையில், நீதிமன்ற விசாரணைக்காக சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் போதெல்லாம் மீடியாக்களிடம் சுகேஷ், திடீர் திடீரென்று ஏதாவது சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி வந்தார். வழக்கில் சிக்கிக்கொண்டாலும் அவரிடம் லஞ்சம் தருவதற்காக பேரம் பேசிய சிலர் இவர் கைதுக்குப் பிறகு பதுங்கிவிட்டார்களாம். தற்போது, வழக்கை நடத்தவே சிரமப்படுகிறாராம். இந்த சூழ்நிலை¬யில் பெங்களூருவுக்கு சுகேஷ் வந்ததே...அவருக்கு அசைன்மென்ட் தந்தவர்களை தேடத்தானாம். டி.டி.வி. தரப்பினர் சிலருடனும் சுகேஷ் பேசியிருப்பாரோ? என்கிற சந்தேகம் டெல்லி போலீஸுக்கு எழுந்துளளது.  

 

சுகேஷ்


அடுத்தகட்ட விசாரணைக்காக கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சுகேஷை அழைத்துப்போய், ஸ்பெஷலாக விசாரிக்கப்போகிறோம் என்று டெல்லி போலீஸ் டீம் ஒன்று திட்டம் போட்டது. இந்த பயணத்திட்ட ஏற்பாடுகள், யார் யார் எஸ்கார்ட் வரவேண்டும்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சுகேஷ் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்திருக்கிறார். சுகேஷின் திட்டப்படி,  7 போலீஸார் எஸ்கார்ட் வந்தனர். இதன், ஒரு கட்டமாக பெங்களூருவுக்கு வந்தனர். சுகேஷை சுதந்திரமாகச் செயல்பட போலீசார் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல் மால்களுக்கு சென்றுவரவும், பிஸினஸில் அவருடன் தொடர்பில் இருக்கும் சிலருடன் போனில் பேச அனுமதித்திருக்கிறார்கள். அதேபோல், பெங்களூரில் தனது தோழி ஒருவருடன் ஜாலியாக இரண்டு நாட்கள் சுற்றியிருக்கிறாராம். முக்கிய பிரமுகர்கள் சிலரையும் சுகேஷ் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு வேண்டப்பட்டவர்களுடன் ஒசி போனில் தொடர்பு கொண்டு காரசாரமாக பேசியதாக தகவல். இரட்டை இலை பெற லஞ்சம் பெற்ற விவகாரத்தில் Ôஆஸ்திரேலியாÕ என்கிற அடைமொழியுடன் சுற்றும் பிரமுகர் பெயரும் அடிபட்டது. கர்நாடகா மாநில முக்கிய அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பவர் அவர். 

டெல்லி போலீஸ் வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்தபோது, 
" எங்களுக்கு இதை வருவாய்துறை அதிகாரிகள்தான் கவனத்தில் கொண்டுவந்தனர். இங்கிருந்து சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் பெங்களூரு போய் விசாரித்தார். சுகேஷ் ஜாலியாக சென்ற மால்கள், பார்க்குகள்...இங்கெல்லாம் இருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை வாங்கிப் பார்த்தபோது, நடந்தது நிஜம் என்று புரிந்துகொண்டோம். முக்கிய ஏரியாவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்ட் ஒன்றில் சுகேஷ் தங்கியிருந்தார். அவருடன் இரண்டு போலீஸ்காரர்கள் மட்டும் இருந்தனர். மற்ற ஐந்து பேர் வெளி இடங்களில் தங்கியிருந்தார்களாம். இதுமாதிரியான பல ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, ஏழு போலீஸாரையும் டிஸ்மிஸ் செய்திருக்கிறார்  டெல்லி போலீஸ் கமிஷனர். இதை மீடியாக்களிடம் டெல்லி போலீஸின் ஸ்பெஷல் கமிஷனரான தீபேந்திர பதக் கூறியிருக்கிறார். டிஸ்மிஸ் ஆன போலீஸார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்கிறார்கள்.

தினகரன் தரப்பில் சுகேஷ் பெங்களூரு விசிட் பற்றிக் கேட்டபோது, "தினகரனை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று மத்திய அரசு திரை மறைவில் ஏதோ செய்வதாக கேள்விப்படுகிறோம். பொறுத்திருந்து பாருங்கள்" என்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்