வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (25/10/2017)

கடைசி தொடர்பு:11:50 (25/10/2017)

வடகிழக்குத் திசையில் காற்று வீசுகிறது! நாளை பருவமழை ஸ்டார்ட்

ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை இன்றுடன் முடிகிறது. தென்மேற்கிலிருந்து வீசும் காற்றின் வேகம் வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கிலிருந்து காற்று வீசத் தொடங்கியிருக்கிறதாம். 'நாளை அல்லது நாளை மறுநாள், வடகிழக்குப் பருவமழை தொடங்கலாம்' என்று கூறப்படுகிறது.

மழை
 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, அக்டோபரில் நிறைவுபெறும். இந்தப் பருவமழை படிப்படியாக முன்னேறி, கடலோர கர்நாடகப் பகுதிகளை அடையும். கர்நாடகாவில் பெய்த மழையால், கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்குப்பருவ மழையால், வறட்சியின் பிடியில் இருந்த தமிழகத்துக்கும் ஆறுதல் அளித்தது. தற்போது, வடகிழக்குத் திசையில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. எனவே, வடகிழக்குப்  பருவமழை நாளை தொடங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தமுறை, வடகிழக்குப் பருவமழை அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.