வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (25/10/2017)

கடைசி தொடர்பு:14:30 (25/10/2017)

100 நீட் தேர்வு பயிற்சி மையம்! தனியாருடன் ஒப்பந்தம் போட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

'மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'நீட் தேர்வு பயிற்சிக்காக 20 கோடி ரூபாயை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தனியார் நிறுவனங்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசு கொண்டுவரும் தேர்வு எதுவாக இருந்தாலும், மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, உரிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது' என்றார்.