கத்தியதால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! அதிகாலையில் அட்டகாசம் செய்த கொள்ளையர்கள்

வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவத்தால், அரியலூர் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே  கூழாட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவ,ர் ஜான்சி ராணி.  இவர், சொந்தக்காரர்களுடன் வீட்டில்  தூங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின் பக்கக் கதவை யாரோ உடைப்பது போன்று சத்தம் கேட்டிருக்கிறது. பூனைதான் உருட்டுகிறது என்று அலட்சியமாக இருந்துள்ளார் ஜான்சிராணி. பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர், பீரோவை உடைத்து, அதிலிருந்த 30 ஆயிரம் பணம், 6 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது பார்த்துவிட்ட ஜான்சிராணி, சத்தம்போட்டிருக்கிறார். அப்போது கொள்ளையர்கள், ஜான்சிராணியின் தலையில் கத்தியால் குத்தியிருக்கிறார்கள்.  அதோடு, அவரது கழுத்திலிருந்த தாலிச் ஜெயினையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். காயமடைந்த ஜான்சிராணி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனயில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

இதேபோல, அருகில் உள்ள மதனை முத்து என்வரின் வீட்டிலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனா். ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தால், தா.பழூா் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த கொள்ளைச் சம்பவம்குறித்து தா.பழூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, இந்தப் பகுதியில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!