வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (25/10/2017)

கடைசி தொடர்பு:08:41 (26/10/2017)

இறந்ததாக அரசு டாக்டர் சான்றிதழ் : புதைக்கும் நேரத்தில் குழந்தைக்கு உயிர் வந்தது!

இறந்ததாக தெரிவிக்கப்பட்ட குழந்தை

திண்டுக்கல், கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த குழந்தைராஜ் - மரிய வினிதா தம்பதிக்கு இன்று காலை 8 மணிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைப் பிறந்தது. பிறந்த பெண் குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடக்கம் செய்தபோது குழந்தை அழுததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, இறந்ததாகத் தெரிவித்த அரசு மருத்துவமனையை உறுவினர்கள் முற்றுகையிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க