வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (26/10/2017)

கடைசி தொடர்பு:07:17 (26/10/2017)

சிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கால்கோல் விழாவில் கலகலத்த அமைச்சர் சீனிவாசன்

சிவகங்கையில் அடுத்த மாதம் 18 -ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. அதற்கான கால்கோல் விழா மன்னர் துரைசிங்கம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், அமைச்சர்கள்  திண்டுக்கல் சீனிவாசன், உதயக்குமார், பாஸ்கரன், மணிகண்டன், விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது.

ஆனால், அவர்கள் இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. முன்கூட்டியே வந்த சுகாதாரத் துறை அமைச்சர் நேராக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு குழந்தைகள் பிரிவில் காற்றோட்டம் இல்லாமலும் ஜன்னல் கதவுகளில் கொசு வலைகள் அடிக்காமலும் இருந்தது. நான் விசிட் வரும்போது பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள் வரணும்னு தெரியாதா? என கடிந்துகொண்டார். ஜன்னல்களுக்கு கொசு வலை அடிச்சுருங்க, குழந்தைகளுக்கு ஃபேன் போடுங்கனு சொன்னார் அமைச்சர். ஆனால், அமைச்சர் சொல்லியும் கடைசி வரைக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வரவில்லை.

கால்கோல் விழா நாடக்கும் இடத்துக்கு அமைச்சர் மணிகண்டன் வந்தார். அவரை அமைச்சர் பாஸ்கரன், எம்.பி. செந்தில்நாதன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றார்கள். இதற்கிடையில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வந்ததும், எங்க ஆள காணோம்  விஜயபாஸ்கர்னு கேட்டார், ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கார் என்றதும், 'ஓ தொழிலுக்குப் போயிட்டாரா?' என சொல்ல அனைவரும் சிரித்தனர். 

கட்சித் தொண்டர் ஒருவர் வணக்கம் போட என்னப்பா நீ இங்கே வந்துருக்கே..?  நீங்க போற இடமெல்லாம் வருவேன்ணே, உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன்ணே, என்று சொல்ல  அம்மா புண்ணியத்துலனு சொல்லு என்றார். பின்னர் அமைச்சர் உதயக்குமார் வந்ததும் கால்கோல் நடும் விழா ஆரம்பமானது. அடுத்த மாதம் 18-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க