புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மோசடி வழக்கு! | Pondicherry university vice chancellor booked in a case

வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (26/10/2017)

கடைசி தொடர்பு:07:55 (26/10/2017)

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மோசடி வழக்கு!

புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அனீஷா பஷீர்கான் உள்ளிட்ட நான்கு ஊழியர்கள்மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இதன் துணைவேந்தராக இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்தி தனது பணி நியமனத்துக்காக பொய்யான ஆவணங்களையும், தகவல்களையும் அளித்ததாகப் புகார் எழுந்தது. அதையடுத்து, அவரைக் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ல் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் துணைவேந்தராக (பொறுப்பு) அனிஷா பஷீர் கான்தான் இருந்துவருகிறார். இவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக பதவி வழங்கியதாக, ஓய்வுபெற்ற உதவி பதிவாளர் பாலசுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்துமாறு புதுச்சேரி போலீஸாருக்கு உத்தரவிட்டது.

அதையடுத்து காலாப்பட்டு போலீஸார், துணைவேந்தர் (பொறுப்பு) அனிஷா பஷீர் கான் மற்றும் ஊழியர்கள் வீரப்பன், ராமச்சந்திரன், ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது ஐபிசி 420 (மோசடி), 468 (மோசடி எண்ணத்தில் செயல்படுதல்) 471 (போலி ஆவணங்கள் தயாரித்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க