ரஜினிகாந்த் கட்டிய அவதார் பாபாஜி மண்டபம் அடுத்த மாதம் திறப்பு!

டிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக நம்பிக்கை அளவில்லாதது. அதிலும் இமயமலையில் வாழ்வதாக சொல்லப்படும் அவதார் பாபாஜி மீது அவர் கொண்டிருக்கும் பக்தி ஆழமானது. இதனால் ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலைப் பகுதிக்குச் சென்று பாபாஜியின் குகைக்குள் தியானம் செய்துவிட்டு வருவார். அந்த குகைப்பகுதி தான் அவரது வாழ்க்கையில் மனதுக்கு நிம்மதியைத் தந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் அடிக்கடி அந்த குகைப்பகுதிக்குச் சென்று வந்ததையடுத்து அந்தப் பகுதி பிரபலமாகி விட்டது. இன்று இமயமலைப் பகுதிக்கு வரும் பலரும் அங்கு சென்று பாபாஜியை வணங்கி  தியானித்துவிட்டு வருகிறார்கள்.

அவதார் பாபாஜி

இதனால் அங்கு வரும் யாத்ரிகர்களின் வசதிக்காக, ரஜினிகாந்தும், அவரின் நண்பர்களும் இணைந்து பாபாஜி குகைக்கு அருகே பாபாஜி தியான மண்டபம் ஒன்றை கட்டி வந்தார்கள். இங்கு யாத்ரீகர்கள் இலவசமாக தங்கிச் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தியான மண்டப பணிகள் யாவும் முழுமையாக முடிவடைந்ததையடுத்து, இதன் திறப்பு விழா அடுத்த மாதம் (நவம்பர்) 10- ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் நண்பர்கள் கலந்துகொள்ள இருக்கும் தியான மண்டப திறப்பு விழாவில் ரஜினிகாந்தும் கலந்துகொள்வாரா என்பது குறித்து எந்தத் தகவலும் உறுதியாகவில்லை. இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதிக்குச் செல்லாத ரஜினிகாந்த் அடுத்த ஆண்டுதான் அங்கு செல்வார் என்ற தகவலும் உலவி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!