வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (26/10/2017)

கடைசி தொடர்பு:11:31 (26/10/2017)

பேனர் விவகாரம்! - தமிழக அரசுக்கு மாலை 4 மணிவரை உயர் நீதிமன்றம் கெடு

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி கட் அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி உத்தரவிட்டது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷனா குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி வைத்திய நாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். 

banner

இந்நிலையில், திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் வைக்கப்பட்ட பேனர்கள் பற்றி ட்ராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், திருச்சியில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃப்ளெக்ஸ்களையும் பேனர்களையும் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்று மாலை 4 மணிக்குள் அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க