பேனர் கலாசாரத்தை விட்டுத்தர மறுக்கும் தமிழக அரசு! - அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

தமிழகத்தில் அரசியல், சினிமா, திருவிழா என எந்த நிகழ்வாக இருந்தாலும் ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைத்து மாஸ் காட்டுவது வழக்கம். பிரமாண்ட பேனர்கள் வைப்பது அந்தஸ்தின் சின்னமாக மாறிவிட்டது. ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்கள் வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பலர் மன்றாடி வருகின்றனர். பேனர் கலாசாரத்துக்கு செக் வைக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம்  கடந்த 24-ம் தேதி ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. 

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷனா குமாரி என்பவர் பேனர்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி வைத்திய நாதன் முன்னிலையில்  இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்துக்கு இடையூறாக கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கட் அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

banner
 

நீதிபதியின் உத்தரவு குறித்து பாராட்டுகள் குவிந்தன. ஆனால், பேனர் தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி வழக்கு தொடுத்தது. அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிமன்றத்திடம் கோரியது. தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!