வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (26/10/2017)

கடைசி தொடர்பு:13:05 (26/10/2017)

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்... காரணத்தால் அதிர்ந்த தீயணைப்புத் துறை!

சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம்மீது ஏறி, ராக்கி என்ற இளைஞர், இன்று காலை தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை மீட்கத் தீயணைப்புத் துறையினர் பலர் அங்கு விரைந்தனர். சில மணி நேரம் ராக்கியுடன் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் கீழே இறங்கி வந்தார். 

தற்கொலை மிரட்டல் விடுக்கும் ராக்கி

அப்போது, விசாரித்ததில், ராக்கியின் காதலி `நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு நீ என்ன செய்தாய்?' என்று கேள்வியெழுப்பினாராம். அதற்குப் பதில் அளிக்கும் வகையில்தான் செல்போன் கோபுரம்மீது ராக்கி ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாராம். இந்தக் காரணத்தைக் கேட்டு அதிர்ந்த தீயணைப்புத் துறையினர், அவரை காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர். 

மீட்கப்பட்ட ராக்கி