அன்னாபிஷேகத்துக்குத் தயாராகும் கங்கைகொண்ட சோழபுரம்

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வரும் நவம்பர் 3ம்தேதியன்று அன்னாபிஷேகவிழா நடைபெறுகிறது. விழாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது.

                     

கூட்டத்திற்கு ஆர்டிஓ டீனாகுமாரி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன், டிஎஸ்பி இனிகோதிவ்யன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் பரிமணம், அன்னாபிஷேக கமிட்டி உறுப்பினர்கள் மகாதேவன், நகராட்சி ஆணையர் சங்கர், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிஷ்ணன், ஒன்றிய ஆணையர் குருநாதன், தொல்லியல்துறை ஜோதி, உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அன்னாபிஷேகம் விழாவுக்கு ஏறத்தாழ 30 முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரவிருப்பதாக அனுமானித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள்  வழங்கினார் ஆர்டிஓ டீனாகுமாரி. டிஎஸ்பி தலைமையில் சட்டம்- ஒழுங்கு, அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீஸாரின் பாதுகாப்புப் பணிகள் இருக்கவும், மருத்துவர்கள், செவிலியர்கள், அவசரகால ஊர்தி, சுகாதார மருத்துவம், பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி ஆகியவை தயார்நிலையில் இருக்கவும், அன்னாபிஷேகம் விழாவின்போது கங்கைகொண்டசோழபுரத்துக்கு அணைக்கரை, மீன்சுருட்டி காட்டுமன்னார்குடி, ஜெயங்கொண்டம், செந்துறை பகுதியிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பக்தர்களின் வருகைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்து வசதிகள் போக்குவரத்து சார்பில் இயக்கப்பட வேண்டும்.

கடந்த வருடம்போல் பேருந்தின் மேற்கூரையில் பயணிகள் பயணம் செய்யாமல் பேருந்துகளை அதிகம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வட்டார வளர்ச்சித்துறை சார்பிலும், நகராட்சி சார்பிலும் கங்கைகொண்டசோழபுரத்தில் தற்காலிகக் கழிப்பறைகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டியில் சுகாதாரக் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தேவையான தீத்தடுப்புச் சாதனங்களுடன் இரண்டு நாள்களும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். மின்சாரவாரியத்தினர் இரண்டு தினங்களும் கங்கைகொண்டசோழபுரம் பகுதிக்குத் தடையின்றி மின்சாரத்தை விநியோகம் செய்ய வேண்டும் எனவும், உள்ளிட்ட ஆலோசனைகளை வலியுறுத்தினார். மேலும் விழாவினை நல்லமுறையில் நடத்தி மாவட்டத்திற்கு நற்பெயர் எடுத்துத் தரவேண்டும் எனவும் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!