காட்டு யானையுடன் புகைப்படம்: இளைஞர்களுக்கு வனத்துறை அபராதம்!

கோவை வனப்பகுதியில் காட்டு யானையை புகைப்படம் எடுப்பதாகத் துன்புறுத்திய இளைஞர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

வனத்துறை

கோவை வனச்சரகம் வனப்பகுதியோரத்தில் உள்ள காட்டுயானைகளை இளைஞர்கள் பலர் துன்புறுத்துவதாக வனத்துறை அலுவலர்களுக்குப் புகார் கிடைக்கப்பெற்றது. வனத்துறைக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுரையின்படி, மாவட்ட வன அலுவலர் சதிஷ் மேற்பார்வையில் கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படைக் குழுவினர் ரோந்துப்பணி மேற்கொண்டபோது ரஞ்சித்குமார், கார்த்திக், பிரகாஷ்குமார் ஆகிய மூவர் ஒரு காட்டுயானையின் அருகில் சென்று செல்போனில் படம் பிடித்து துன்புறுத்திவருவதைக் கண்டனர். இதனால் அவர்கள் மேல் வழக்குப் பதிவுசெய்து மூவருக்கும் தலா ரூ.5000/- வீதம் ரூ15000/- இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மேலும், இதுபோன்று வனவிலங்குகளைத் துன்புறுத்துவர்கள்மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!