அதிகாலையிலேயே ’டெங்கு’ குறித்து ஆய்வுசெய்யும் குமரி கலெக்டர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு கண்காணித்து வருகிறது. நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் ஆணையர், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் டெங்குக் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் நீர் தேங்கியிருக்கும் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல், திரையரங்குகள், வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், நாகர்கோவில் நகரிலுள்ள முக்கிய மருத்துவமனைகள், பள்ளிகள் அபராதத்தைப் பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன் சிங் சவான் தினம்தோறும் அதிகாலை முதல் டெங்கு ஆய்வில் ஈடுபட்டுவருகிறார். டெங்குக் கொசு உற்பத்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தப் பகுதியில் கொசு உற்பத்தி இருந்தாலும் 18004250363 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு அறை கடந்த 15-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை 76 புகார்கள் வந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!