குமரி மாவட்டத்துக்கு முறையான அனுமதி பெறாமல் மணல் கொண்டு வரும் லாரிகள் பறிமுதல்!

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மணல் கடத்தி வரும் மணல் லாரிகள் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி போலீஸாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன. திருச்சி மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு லாரியில் மணல் கொண்டு வரும்போது முறையான அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கொண்டுவருகின்றனர். இவர்கள் காவல்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்கு பல தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர். திருச்சியில் இருந்து லாரியில் குறைந்த அளவில் மணல் ஏற்றி அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் அபராதம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்கின்றனர். அதன்பிறகு அதே லாரியில் அதிக அளவு மணல் ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லாரி மணல் ருபாய் 80 ஆயிரத்துக்கும் மேல் விற்கப்படுகிறது.

எனவே, திருச்சியில் இருந்து குறைந்த அபராதத் தொகையை செலுத்திவிட்டு குமரி மாவட்டத்துக்கு மணலைக் கொண்டுவந்து அதிகத் தொகைக்கு விற்றுவிடுகின்றனர். மணல் கடத்துபவர்கள் இதுபோன்ற தில்லுமுல்லு செய்வதால் போலீஸார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் அதிகமான லாரிகள் சோதனையின்போது முறையான ஆவணம் இன்றி மணலை கொண்டுவருவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த சில நாள்களாக தினம்தோறும் மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!