வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (27/10/2017)

கடைசி தொடர்பு:09:32 (27/10/2017)

`கட்டுப்பாட்டு அறை அமைத்தால் போதுமா?' - தமிழக அரசை சாடும் ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையொட்டி மழை பாதிப்புகள்குறித்து புகார் தெரிவிக்க அவசர எண்களை தமிழக அரசு அறிவித்தது. மேலும், சென்னை மாநகராட்சி கட்டடத்தில் வெள்ள பாதிப்புகள்குறித்து புகார்களைக் கேட்டு அதை தீர்ப்பதற்கான பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், `கட்டுப்பாட்டு அறை அமைத்தால் மட்டும் போதுமா?' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜி.ராமகிருஷ்ணன்

இதுகுறித்து அவர், `வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் அல்லது பிற பாதிப்புகள் ஏற்பட்டது என்றால் அதைச் சரிசெய்ய, மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அங்கு கட்டுப்பாட்டு அறை திறந்து பிரயோஜனம் இல்லை. சென்னையிலும் சென்னையை ஒட்டி ஓடும் ஆறுகளை சுத்தம் செய்ய வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.