`மெர்சல்' படத்துக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை!

`மெர்சல்' திரைப்படத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது. 

சென்னை உயர் நீதிமன்றம்

விஜய் நடித்துள்ள `மெர்சல்' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், `இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள்குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இன்று இந்த வழக்கை விசாரிக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!