வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (27/10/2017)

கடைசி தொடர்பு:11:05 (27/10/2017)

316 அரசு மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணை!

பணி ஆணையை வழங்கும் முதல்வர் பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று 316 மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். 316 மருத்துவர்களும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியை ஆரம்பிக்க உள்ளனர். அனைவரும், உடனடியாக காய்ச்சலை கட்டுப்படுத்தும் வேலையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஆணைகளை மருத்துவர்களுக்கு வழங்கும்போது தமிழக நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

பணி ஆணை வழங்கிய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைய காரணமானவர் முன்னாள் முல்வர் ஜெயலலிதாதான். 22,358 பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு உள்ளது. உதவி மருத்துவ பணியிடங்கள், தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது' என்று பேசினார்.