Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`இது டெங்கு மாநிலம் மட்டுமல்ல... குட்கா தேசம்!' - கொந்தளித்த மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஆய்வுமேற்கொண்டார் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக அரசைப் பற்றி, `இது டெங்கு மாநிலம் மட்டுமல்ல; இது குட்கா மாநிலம்; குதிரை பேர ஆட்சி நடக்கும் மாநிலம். எல்லா பட்டங்களையும் கொடுக்கக் கூடிய தகுதியும் இந்த ஆட்சிக்கு இருக்கிறது' என்றார். 

மு.க.ஸ்டாலின்

செய்தியாளர்களைச் சந்தித்தபோது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் மு.க.ஸ்டாலின். வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், அதுகுறித்து ஸ்டாலின், `பருவமழை தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கெனவே வர்தா புயலிலும் சரி, டிசம்பர் மாதம் வந்த வெள்ளத்தின் போதும் சரி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதையெல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இந்த குதிரை பேர ஆட்சி எந்த நடவடிக்கை எடுக்காது என்பது விளங்குகிறது. ஆனால், இந்த முறையாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. தொண்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பக்கம் திரும்பியவர், `ஆர்.பி.உதயகுமார், நான் அரசியலுக்காக இப்படிப்பட்ட கருத்துகளை கூறி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக அரசு 100 சதவிகிதம் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். அது உண்மைதானா என்று அறிவதற்காகவே, இந்த தொகுதிக்கு வருகை தந்து ஆய்வுமேற்கொண்டேன். கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது, சுகாதாரமற்ற நிலையில் வசிப்பிடங்கள் இருக்கிறது. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இது ஒரு முக்கியமான தொகுதி. ஜெயலலிதா இரண்டு முறை வெற்றி பெற்ற தொகுதியையே இப்படி வைத்திருப்பது வேதனைக்குரியது' என்று முடித்தார். 

இதையடுத்து, கமல் கொசஸ்தலைப் பற்றி போட்ட ட்வீட் பற்றி கேட்டதற்கு, `கமல் மட்டுமல்ல எதிர்க்கட்சியாகிய நாங்களும்தான் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றவரிடம், `இது டெங்கு மாநிலம் என்று ஸ்டாலின் கூறியிருப்பது அநாகரிகமானது என்று முதல்வர் கூறியுள்ளாரே' என்று கேள்வி கேட்டதற்கு, `டெங்கு மாநிலம் மட்டுமல்ல இது குட்கா மாநிலம்; குதிரை பேர ஆட்சி நடக்கும் மாநிலம்; எல்லா பட்டங்களையும் கொடுக்கக் கூடிய தகுதியும் இந்த ஆட்சிக்கு இருக்கிறது' என்று கூறிவிட்டு விரைந்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close