’மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ - நித்தியானந்தா புதிய மனு | nithyananda filed petition agains madurai in hc

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/10/2017)

கடைசி தொடர்பு:21:17 (27/10/2017)

’மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ - நித்தியானந்தா புதிய மனு

மதுரை ஆதீனத்துக்குள் நித்தியானந்தா நுழைய மதுரை உயர் நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்கக் கோரி நித்தியானந்தா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

aathinam

 

அந்த மனுவில், ‘மதுரை ஆதீனம் மடத்தின் மடாதிபதியாக நியமனம் செய்வதற்கு அனைத்து தகுதிகளும் எனக்குள்ளது. மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனமாகக் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முறைப்படி நியமனம் செய்யப்பட்டேன். என்னைப் பதவி நீக்கம் செய்ய மடத்தின் தலைவர் உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதனால் எனது நியமனம் ரத்து செய்யப்பட்டது செல்லாது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆதீனம் மடத்துக்குள் நுழைய எனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்’ என நித்தியானந்தா தனது மனுவில் கூறியிருந்தார் .இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்று மதுரை ஆதீன மடத்துக்கு எதிரே மர்ம நபர்கள் சிலர் காரில் வந்து பட்டாசுகளைப் போட்டுவிட்டு நித்தியானந்தா வாழ்க வாழ்க என்று கூறிவிட்டு காரில் கிளம்பியுள்ளனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.