தோனி மகள் ஸிவாவுக்கு கேரளாவில் சிறப்பு அழைப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழா  மாவட்டத்தில்,  அம்பலப்புழா உன்னி கிருஷ்ணன் கோவில் உள்ளது. இது பிரசித்திப் பெற்ற கோவிலாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால், ஜெயராம் நடித்த  அத்வைதம் என்ற திரைப்படத்தில் அம்பலப்புழா  உன்னி கண்ணனோடு  நீ என தொடங்கும் பாடல் பிரபலமானது. தற்போது இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனியின் 2 வயது மகளான ஸிவா இந்தப் பாடலை பாடும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆனது.

இந்த வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2 வயதான ஸிவா மூலம் அம்பலப்புழா உண்ணி கிருஷ்ணன் கோவில் உலக அளவு பிரபலமாகி உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம்  14-ம் தேதி நடைபெறும்    களபம் திருவிழாவின் போது  கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவாவுக்கு  சிறப்பு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸிவா திருவிழாவுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!