அர்ப்பணிப்பின் அர்த்தமே நிவேதிதா#HBDNivedita

யர்லாந்தில் 1867-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் பிறந்தார் மார்கரெட் எலிசபெத் நோபிள். பின்னர் குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்குக் குடி பெயர்ந்தார். மிகச்சிறந்த கல்வியாளர் என்று போற்றப்படும் அளவுக்குக் கல்வித்துறையில் நவீனக் கற்பித்தல் முறைகளைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் மார்கரெட். அவரது இருபத்தியெட்டாவது வயதில் 1895-ம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரைச் சந்தித்தார். அப்போதுதான் அவருக்கு இந்தியாவைப் பற்றிய பல தேடல்கள் உருவாகின. ஞான பூமியான இந்தியாவை தரிசிக்க 1898-ம் ஆண்டு வந்தார். ஸ்வாமி விவேகானந்தரின் சிஷ்யையாக மாறி தனது பெயரை "நிவேதிதா' என்று மாற்றிக்கொண்டார். நிவேதிதா என்றால் அர்ப்பணிப்பு என்று பொருள்.

நிவேதிதா

ஆம், அன்றிலிருந்து இந்தியாவின் விடுதலை, கல்வி முறை, பெண்கள் முன்னேற்றம், சமூக முன்னேற்றம், கலைகளின் வளர்ச்சி, ஆன்மிகத் தேடுதல் என ஏகப்பட்ட பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் இந்த நிவேதிதா. அயராத தனது மக்கள் பணிக்காக இவர் அன்பாக 'சகோதரி' என்றே அழைக்கப்பட்டார். இந்திய தேசத்தின் எல்லாத் தலைவர்களும் கொண்டாடும் தலைவராகப் போற்றப்பட்டார். பாரதியாரின் ஆன்மிக குருவாக விளங்கினார். எங்கோ ஓர் அயல் தேசத்தில் பிறந்து இருந்தாலும் சகோதரி இந்தியாவின் ஆன்மாவாக விளங்கினார். அர்ப்பணிப்பின் அதிதேவதையாகவே இருந்த சகோதரி நிவேதிதாவின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவுகளை நெஞ்சில் ஏந்தி அவரை வணங்குவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!