வடகிழக்குப் பருவமழை வலுப்பெறும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

வடகிழக்குப் பருவமழை அடுத்த இரண்டு நாள்களில் வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம்

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, அக்டோபரில் நிறைவுபெறும். இந்தப் பருவமழை படிப்படியாக முன்னேறி, கடலோரக் கர்நாடகப் பகுதிகளை அடையும். கர்நாடகாவில் பெய்த மழையால், கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழையால், வறட்சியின் பிடியில் இருந்த தமிழகத்துக்கும் ஆறுதல் அளித்தது. தற்போது, வடகிழக்குத் திசையில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. எனவே, வடகிழக்குப்  பருவமழை தொடங்கியுள்ளது. இந்தமுறை, வடகிழக்குப் பருவமழை அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

அதன்படி அடுத்த இரண்டு நாள்களுக்கு வடகிழக்குப் பருவமழை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டமாகவே காட்சியளிக்கிறது. அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!