மக்களுடன் குதூகலமாக விளையாடிய கிரண்பேடி!

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மக்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கிரண்பேடி

5 நாள் சுற்றுப் பயணமாக காரைக்கால் சென்ற ஆளுநர் கிரண்பேடி நேற்று இரவு புதுச்சேரி திரும்பினார். வார இறுதி நாளான இன்று வழக்கம்போல கிராமப் பகுதிகளுக்கு ஆய்வுக்குச் சென்றார். அதன்படி பாகூரை அடுத்த சோரியாங்குப்பத்துக்குச் சென்ற அவர் உலக ஒற்றுமை தினத்தையொட்டி அந்த கிராம மக்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார். மேலும், அவர்களுடன் கயிறு இழுப்பது உள்ளிட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினார். அதன்பின் அப்பகுதி மக்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பத் தயாரானார். 

கிரண்பேடி

அப்போது அவர்களில் ஒருசிலர் “நலத்திட்டங்களைத் தடுக்கக் கூடாது என்றும் இலவச அரிசி போடவில்லை, மின் கட்டணம் மற்றும் குடிநீர்க் கட்டணம் உயர்வு தொடர்பாகப் புகார் கூறவும் கிரண்பேடியின் கார் அருகே வந்தனர். அப்போது போலீஸ் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் கிரண்பேடியின் காரை முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால், போலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!