வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (28/10/2017)

கடைசி தொடர்பு:11:42 (28/10/2017)

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குத் தமிழக அரசு நிதி: தமிழினத்தின் சார்பாக ஜி.வி.பிரகாஷ் நன்றி

அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு நிதி ஒதுக்கியதற்காக இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜி.வி

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில், தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாவார்டு தமிழ் இருக்கைக்காக நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர் மற்றும் திரு மாஃபா பாண்டியராஜ் அவர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக நன்றி” எனக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.