Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு வீடாகச் சென்று டெங்கு விழிப்பு உணர்வு -அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்

Dharmapuri: 

வீடு வீடாகச் சென்று டெங்கு விழிப்புஉணர்வு செய்து வரும் அரசுப் பள்ளி மாணவர்களை மக்களும், அரசு சுகாதாரத்துறையும் வெகுவாகப் பாராட்டியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மிகப்பெரிய கிராமப் பஞ்சாயத்து ஆக இருக்கும் ஜருகு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியைச் சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் மூலமாக தங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், அங்கு வசிக்கும் மக்களிடையேயும் டெங்குக் காய்ச்சல் எவ்வாரெல்லாம் பரவுகின்றன? அவற்றை தடுப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதை தமது பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புஉணர்வினை ஏற்படுத்த முயன்றார் ஜருகு பள்ளியின் தலைமை ஆசிரியர் வீ.பரமசிவம். எனவே, தமது பள்ளி மாணவர்கள் சிலரை ஒன்று திரட்டி தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தில்(JRC) இணைத்தார். அது மட்டுமல்லாமல் அவரே அதன் தலைவராகவும் உள்ளார். இதில் சுமார் 50 மாணவ, மாணவிகள் உறுப்பினராக உள்ளனர். அந்த மாணவர்களை வழிநடத்த அங்கு பணியாற்றும் ஆசிரியை சுகுணா(ஆலோசகர்) உள்ளார். இவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் இந்த மாணவர்கள் வாரத்தின் இறுதி நாள்களான வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தேதிகளில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று அங்குள்ள வீடுகளிலும்,வெளிப்பகுதிகளிலும் டெங்குக் காய்ச்சலுக்குக் காரணமான கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றைச் சுத்தப்படுத்துவது மட்டும் அல்லாமல் அந்தப் பகுதி மக்களிடையே விழிப்புஉணர்சி கருத்துகளையும் கூறிவருகின்றனர்.

a


இது குறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் வீ.பரமசிவம், எங்கள் பள்ளியின் மாணவர்கள் மூலம் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலைத் தடுக்க சுற்றியுள்ள கிராமங்களில் ஏதாவது வழி செய்ய முடியுமா என ஆசிரியர்கள் அனைவரும் கலந்து ஆலோசனை செய்தோம். அதன்படி செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் விழிப்புஉணர்வினை ஏற்படுத்தலாம் என்ற முடிவில் இறங்கினோம். இதன் மூலம் எங்கள் பள்ளி மாணவர்கள் ஏற்படுத்திய ஆர்வத்தோடு கூடிய விழிப்புஉணர்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று விழிப்புஉணர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர் எங்கள் மாணவர்கள். இதனால் அக்கிராம மக்களிடையே ஓரளவு விழிப்புஉணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்ததன் காரணமாக தருமபுரி மாவட்ட பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரவிசங்கர் ஆகியோர் ஜருகு அரசுப் பள்ளியைப் போன்று, அனைத்து மாவட்ட அரசுப் பள்ளிகளும் டெங்கு விழிப்புஉணர்வு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டிப் பேசியது எங்களுக்கும்,மாணவர்களுக்கும் மேலும் உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது என்று பரசிவம் கூறியுள்ளார்.
இது மாவட்ட அளவில் தங்கள் பள்ளியைப் பற்றி பேச வைத்திருப்பதாகக் கூறி பெருமைப்படுகிறார் தலைமை ஆசிரியர் வீ.பரமசிவம்.

வாழ்த்துகள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement