வைகை அணைத் திறப்பு! - 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  வைகை அணையை வரும் 1ம் தேதி திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

vaigai

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ‘வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 120 நாள்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பைப் பொறுத்து 1.11.2017 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!