தினகரன் பல முறை சொல்லியுள்ளார் நடந்துள்ளதா? இதுவும் நடக்காது - அமைச்சர் உறுதி

ஆர்.பி

மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ’வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் அச்சப்படாத வகையில் தேவையான அனைத்தையும் செய்து வைத்துள்ளோம். அதற்கான பணிகள் 99% சதவீதம் முடிவுற்ற நிலையில், 1% சதவீதம் பணிகள் கூட முடியவில்லை என ஸ்டாலின் கூறுவது அரசியல் காழ்புணர்ச்சி. 

கமல் மக்களுக்காகப் பணியாற்ற வருவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுதான் அதிகாரத்தையும் பெற முடியும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்கள் பணியாற்றலாம். ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என டி.டி.வி இதற்கு முன்னர் பலமுறை கூறியுள்ளார் அது நடந்து உள்ளதா? அது போல பொங்கலுக்குள் ஆட்சி கவிழும் என்ற ஆசையும் நிறைவேறாது. அம்மாவின் ஆட்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்’ எனத் தெரிவித்தார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!