எய்ம்ஸ்க்காகப் போராட டெல்லி ஜந்தர்மந்தர் செல்வோம்... இது மணிசங்கர் வாய்ஸ்

தஞ்சாவூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் அமையாமல் இழுத்தடித்து வருவதற்கு காரணம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் காரணம் எனக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் குற்றம் சாட்டியுள்ளார்.

 டெல்லி

எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைத்திடவேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மணிசங்கர் அய்யர், தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏற்ற இடமாக உள்ளது. அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடமாக செங்கிப்பட்டி உள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியாகவும் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எய்ம்ஸ் அமையவிடாமல் இடையூராக இருப்பவர் மத்தியில் ஆளும் பாஜக அரசின் அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் விஷத்தனமே காரணம். அவர்தான் இதற்கான காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறார். ஏனென்றால் விளையாட்டுத் துறைக்கான இன்ஸ்டிடியூட் தமிழகத்திற்கு வந்தது, அதை அவரது பகுதியில் அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி செய்தார். நான் மத்திய அமைச்சராக இருந்ததால் மயிலாடுதுறையில் அந்த இன்ஸ்டிடியூட்டை அமைத்துக் கொடுத்தேன். அதற்காகப் பழிவாங்கும் நடவடிக்கையில்கூட பொன்.ராதாகிருஷ்ணன் டெல்டா பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமையவிடாமல் தடுப்பதற்காக முயற்சி செய்யலாம். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கட்சியினரும் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப் போராட வேண்டும். இங்குள்ள அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த முன்வந்தால் காங்கிரஸ் கட்சி அதற்காக ஏற்பாடுகளைச் செய்யும் என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!