U-17 உலகக் கால்பந்து போட்டி சாம்பியன் ஆனது இங்கிலாந்து

கொல்கத்தாவில் பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான U-17 உலகக் கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான U-17 உலகக் கால்பந்து தொடர் முதன்முதலாக இந்தியாவில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் முதல் ஃபிஃபா தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய U-17 உலகக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் ஸ்பெயின் அபாரமாக விளையாடியது. ஸ்பெயின் வீரர் செர்ஜியோ கோமஸ் 2 கோல்களை அடித்து ரசிகர்களை உற்சாகமாக்கினார். அடுத்து முதல் பாதி ஆட்ட நேரம் முடியும்போது இங்கிலாந்து வீரர் பிரேவ்ஸ்டர் ஒரு கோலை அடித்து இங்கிலாந்தின் முன்னேற்றத்துக்கு வழி காட்டினார்.

உலகக் கால்பந்து

அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து ஜோரான ஆட்டத்தைத் தொடங்கியது. கிப்ஸ் ஒயிட், ஃபொடேன், குயெஹி போன்ற இங்கிலாந்து வீரர்கள் கோல்களை குவித்து மொத்தமாக இங்கிலாந்து அணிக்கு 5 கோல்களைப் பெற்றுத் தந்தார்கள். ஏற்கெனவே ஸ்பெயின் 2 கோல்களை மட்டுமே பெற்றிருந்தது. இதனால் 5 - 2 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து நாடு பதினேழு வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஸ்பெயின் நாடு  இரண்டாம் இடத்தைப் பெற்றது. பிரேசில் மற்றும் மாலி நாடுகளுக்கிடையேயான இந்த U-17 உலகக் கால்பந்து போட்டியில் பிரேசில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை வென்றது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!