வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (29/10/2017)

கடைசி தொடர்பு:10:28 (30/10/2017)

நாளை ராஜராஜ சோழரின் 1032-வது ஆண்டு சதய விழா#HBDRajarajaChola

தமிழகத்தின் மிகச்சிறந்த மாமன்னர் என்று போற்றப்படும் ராஜராஜ சோழரின் 1032-வது ஆண்டு சதய விழா நாளை திங்கட்கிழமை (30-10-2017)  கொண்டாடப்படவுள்ளது. ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் பிறந்ததால் இந்த விழா ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் காட்டியதால் மட்டுமின்றி, மிகச்சிறந்த நிர்வாகம், கடல் வாணிகம், பரந்த ஆட்சிப்பகுதி, மக்கள் ஆட்சி முறை எனப் பல்வேறு காரணங்களால் ராஜராஜ சோழர் இன்றும் நம்மால் நினைவு கொள்ளப்படுகிறார்.

சதய விழா

தொடர்ந்த வெற்றிகள், மக்கள் மீதான அக்கறை, கலைகளின் மீது கொண்ட ஆர்வம், நிர்வாக சீரமைப்பு என ராஜராஜ சோழரின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாகவே விளங்கியது என்று வரலாறு இவரைக் கொண்டாடுகிறது. அதன் காரணமாகவே இன்றும் அவரை நினைவுகொண்டு அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறோம். தமிழக அரசின் சார்பாக இவரது பிறந்த தினம் சதய விழாவாக தஞ்சையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் 30-ம் தேதி தஞ்சை பகுதிக்கு உள்ளூர் விடுமுறையும் கொடுப்பது வழக்கமாக உள்ளது. தமிழகத்தின் பொற்கால ஆட்சிக்கு சொந்தக்காரரான ராஜராஜ சோழரின் சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.