வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (29/10/2017)

கடைசி தொடர்பு:15:50 (09/07/2018)

முதல்வர் துணைமுதல்வர் போஸ்டர்கள் கிழிப்பு! - கமுதியில் பரபரப்பு

தேவர் குருபூஜை விழாவுக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எல்லாம் தினகரன் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டு வருவது கமுதி பகுதிகளில் கலவர சூழலை ஏற்படுத்தியுள்ளது.

edappdi palanisamy
 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 110-வது ஜயந்தி விழாவும், 55-வது குருபூஜையும் நாளை பசும்பொன்னில் நடக்க உள்ளது. இதையொட்டி குருபூஜை அன்று தேவரின் நினைவிடத்தில் அரசு சார்பிலும், அ.தி.மு.க சார்பிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 8 அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த நாளை பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளனர்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக  பசும்பொன்னிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் சிலர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கமுதி, பசும்பொன், அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் உள்ள முதல்வர் எடப்பாடியின் படத்தையும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் படத்தையும் தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். 

குருபூஜை விழாவுக்கு வரும் எடப்பாடி போஸ்டர்கள் கிழிப்பு
 

முதல்வர் எடப்பாடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துள்ள இந்த சம்பவங்களால் நாளை முதல்வர் வருகையின் போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து, இப்பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.