மோடியா மன்மோகன் சிங்கா?? ’கன்ஃப்யூஸ்’ ஆன திண்டுக்கல் சீனிவாசன்!

நாட்டின் பிரதமர் பெயரையே தவறாக குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல்
 

திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் எடப்பாடி பழனிசாமி அரசின் டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகள்குறித்து புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன் ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு தொடர்பாக ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்’ என்று உளரிக் கொட்டினார். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்வதற்குப் பதில் மன்மோகன் சிங் என்று சொன்னதைக் கூட அறியாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த வீடியோப் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசனை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!