ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி! - நடிகர் விஷால் அறிவிப்பு | Actor Vishal to donate 10 lakhs to Tamil chair at Harvard University

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (29/10/2017)

கடைசி தொடர்பு:10:08 (30/10/2017)

ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி! - நடிகர் விஷால் அறிவிப்பு

ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். 

vishal
 

இதுகுறித்து விஷால் வெளியிட்ட அறிக்கையில், ‘380 ஆண்டுகளாக இயங்கிவரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்துவருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்!

தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய்தான் சேர்ந்துள்ளது. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்றுச் சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க