சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது! | Priest gideon jacob arrested in running illegal children home case

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (29/10/2017)

கடைசி தொடர்பு:09:11 (30/10/2017)

சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது!

திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

 

கிடியன் ஜேக்கப்
 

 

இவர், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 'மோசே மினிஸ்ட்ரி' எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார். இதன் நிர்வாகியும் பாதிரியாருமான கிதியோன் ஜேக்கப், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 இதையடுத்து அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.
 
  கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், நேற்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார். அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், நேற்றிரவு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப்  கைது,அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க