மெர்சல் திரைப்படத்துக்கு எதிராகப் போராடிய இந்து மக்கள் கட்சியினர் கைது!

 

இந்து மக்கள் கட்சி
 
நடிகர் விஜய் நடித்து  வெளிவந்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ள காட்சிகளை நீக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்தினர். மேலும், ஜி.எஸ் டி வரிகுறித்து தவறான  விவரங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் குழப்பத்தை உருவாக்கி மத்திய அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் திரையிடப்பட்டுள்ள காட்சிகளையும் நீக்கிட கோரி, இந்து மக்கள் கட்சியின்  மாநில துணைத் தலைவர் திருச்சி மாரி தலைமையில், "மெகா ஸ்டார்" திரையரங்கம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
 
இதில், மாவட்ட அமைப்பாளர் சந்துரு,  மாவட்டத் தலைவர் பரமானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல், மாவட்டச் செயலாளர் பெரியண்ணன், மேற்கு மாவட்டச்  செயலாளர் சுந்தர்ராஜன்,  மாநகர தலைவர் சரவணகுமார் என பலர் கலந்துகொண்டனர். இறுதியாக இந்து மக்கள் கட்சியினர் 21க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!