தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும்! காசநோய்க்கு டாக்டர்கள் அட்வைஸ்! | new TB tablet introduction in Kancheepuram

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (30/10/2017)

கடைசி தொடர்பு:10:10 (30/10/2017)

தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும்! காசநோய்க்கு டாக்டர்கள் அட்வைஸ்!

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளைக்கு ஏழு மாத்திரைகள் வீதம், வாரம் மூன்று நாள்களுக்கு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால், சில நாள்கள் மறதியில் விட்டுவிடுவார்கள். முறையான சிகிச்சை இல்லாததால், காசநோய் குணமாவதில் சிலருக்கு தொய்வு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தினமும் ஒரு மாத்திரை உட்கொள்ளும் வகையில் புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காசநோய்

இந்தியாவில், 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக, 'தினசரி மாத்திரை உட்கொள்ளும் திட்டம்' என்ற புதிய திட்டத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் பைரவசாமி அதைத் தொடங்கிவைத்துள்ளார். அப்போது, ”உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய காசநோய் தடுப்பு மையத்தின் பரிந்தரையின்படி, வாரந்தோறும் 21 டாட்ஸ் மாத்திரைகள் இதுவரை வழங்கப்பட்டன. ஆனால், இனி அவர்கள் நிறைய மாத்திரைகள் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அனைத்து மருந்துகளும் அடங்கிய மாத்திரைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு காசநோய் மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும்.” என்கிறார் பைரவசாமி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க