செல்வராகவனுடன் இணையும் சூர்யா

'சிங்கம்' படத்துக்குப் பிறகு, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார், நடிகர் சூர்யா. முதல் முறையாக கீர்த்தி சுரேஷூடன் ஜோடி சேர்ந்திருக்கும் சூர்யாவை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் இந்த நேரத்தில், இந்தப் படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு' பாடல் இணையத்தில் வெளியாகி, சூர்யா ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கியது. 

சூர்யா


இதற்கிடையில், சூர்யாவின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. செல்வராகவன்தான் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 

 

சூர்யா


மேலும், இந்தப் படத்தைத் தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 
சூர்யா-செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த  வருடம் ஜனவரியில் ஆரம்பமாகும் எனவும் படத்தில் நடிப்பவர்கள் மற்றும் பணியாற்றுபவர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!