வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (30/10/2017)

கடைசி தொடர்பு:13:17 (30/10/2017)

#ALERT சென்னையில் மிகக் கனமழை பெய்யக்கூடும்!

அடுத்த 24 மணி நேரத்தில், சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain
 

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தின் மழை நிலவரம்குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ‘தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நேற்று நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்குச் சூழற்சி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை உள்ளிட்ட இடங்களில் கனமழை அல்லது மிகக் கன மழை பெய்யும். தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட  தென்கடலோர மாவட்டங்கள் ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும். இன்று காலை அதிகபட்சமாக நாகையில் 9 செ.மீ மழை பதிவானது. சென்னையில் ஒரு சில இடங்களில் 6 செ.மீ பதிவானது’ என்றார். 

மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க