தீக்குளிப்பு சம்பவம் எதிரொலி! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்குத் தீவிர சோதனை! | kancheepuram collector office was alert after tirunelveli incident

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (30/10/2017)

கடைசி தொடர்பு:15:11 (30/10/2017)

தீக்குளிப்பு சம்பவம் எதிரொலி! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்குத் தீவிர சோதனை!

திருநெல்வேலியில் கடந்த திங்கள்கிழமையன்று கந்து வட்டிக் கொடுமை காரணமாக இசக்கிமுத்து என்ற கூலித்தொழிலாளி குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டார். சிகிச்சை பலனின்றி அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

தீக்குளிப்பு

இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் இரண்டு பெண்கள் மண்ணெண்ணெயைத் தங்கள்மீது ஊற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்துவட்டி, ஆளும்கட்சி அடக்குமுறை உள்ளிட்ட எந்தப் பிரச்னையானாலும் மக்கள் மண்ணெண்ணெய் கேனை கையில் எடுப்பது தொடர்ந்தது. இதனால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய விழாக்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருபவர்களைத் தீவிரமாகக் காவல்துறையினர் கண்காணிக்க தொடங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருபவர்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடும்ப சகிதமாக வருபவர்களை என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள் எனக் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். மேலும் அவர்களின் வாகனங்கள், கொண்டுவரப்படும் பைகள் உள்ளிட்டவையையும் காவல்துறையினர் தீவிரமாகச் சோதிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டபோது, பத்திரிகையாளர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர். அதுபோல் மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்ளும் சம்பவம் நடந்து சர்ச்சையாகக் கூடாது என மாவட்ட நிர்வாகம் நினைக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க