வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (30/10/2017)

கடைசி தொடர்பு:16:05 (30/10/2017)

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்! தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில், பொது இடத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்கள் பரவுகின்றன.  'குப்பைகளைப் பொது இடத்தில் கொட்டினால், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்' என ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார். 

thoothukudi municipal corporation

இதுகுறித்துப் பேசிய அவர், ‘’ தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஹோட்டல், இரவு உணவு விடுதி மற்றும் தெருவோர வியாபாரிகள், தங்கள் கடை மற்றும் நிறுவனங்களில் மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தனித்தனியாக இரண்டு குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கும் படி, இரண்டு குப்பைத் தொட்டிகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.  அவற்றில்தான்  குப்பைகளை தனித்தனியாகப் பிரித்து சேகரித்து வைக்க வேண்டும்.

எந்தக் காரணத்தாலும் குப்பைகளைத் திறந்தவெளியிலோ, ரோட்டு ஓரங்களிலோ கொட்டிவிடக்கூடாது. அப்படிக் கொட்டினால், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் தரை மட்டத்துக்குக் கீழே தண்ணீர் பிடிக்கும் வகையில் உள்ள தண்ணீர் தொட்டிகள் இருந்தால், அவற்றை கொசுக்கள் புகாதபடி பாதுகாப்பாக மூடிவிட வேண்டும்.    

காலி மனைகளாக இருந்தால், அவற்றில் குப்பைகள் தேங்காதபடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களில், கொசுப்புழு உற்பத்தி ஆகாதவாறு 3 நாள்களுக்குள் பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்திட வேண்டும். இதில் தவறும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள்மீது ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். டெங்கு கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க