வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (30/10/2017)

கடைசி தொடர்பு:09:04 (31/10/2017)

மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த பாலிடெக்னிக் மாணவன் கைதுசெய்யப்பட்டு சிறார் சிறையில் அடைப்பு

பிரதமர் நரேந்திர மோடியை ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சித்த பாலிடெக்னிக் மாணவன் கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். 


விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாணவர் திருமுருகன். அவருக்கு வயது 17. பாலிடெக்னிக் படிக்கும் திருமுருகன் ஃபேஸ்புக்கில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளான். இதுதொடர்பாக பிரதமர் மோடியைத் தீய வார்த்தைகள் பயன்படுத்தி விமர்சித்தாக பா.ஜ.க-வினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், திருமுருகனை போலீஸார் கைதுசெய்து மதுரை மாவட்டம் மேலூர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். அந்தச் சிறுவன் மீது, ஐ.பி.சி 505 மற்றும் ஐ.பி.சி 627 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.